மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மதுரை அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2025-04-10 04:45 GMT
மதுரை மாவட்டம் பேரையூர் அள்ளிகுண்டம் மேல தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் பாண்டி (17) பிளஸ் டூ படித்துள்ளார். இரண்டாவது மகன் விஷ்ணு வயது(15) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இதில் மூத்த மகன் பாண்டி நேற்று முன்தினம் (ஏப்.8)அல்லிக் குண்டத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் நடந்த நடன நிகழ்ச்சியை காண்பதற்காக மேடை அருகே நின்ற பொழுது எதிர்பாராத விதமாக மின்சார வயரை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தவரை அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது தந்தை பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News