செஞ்சி அருகே விமர்சையாக நடைபெற்ற மாரியம்மன் தேர்பவனி
திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்;
செஞ்சி அடுத்த கீழ்பாப்பாம்பாடி வேம்பியம்மன், மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மதியம் சாகை வார்த்தலும் இரவு சாமி வீதி உலா நடந்தது. தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சாமி ஊர்வலம் நடந்து வந்தது. 5ம் நாள் விழாவாக அம்மச்சாரம்மன் கோவிலில் இருந்து வேம்பியம்மன் கோவிலுக்கு தேர் கொண்டு வந்தனர்.நற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வேம்பியம்மன், மாரியம்மன் கோவிலில் இருந்து தேர் பவனி துவங்கியது. இரவு ஊர் வழக்கப்படி சாமி நாடகம் பார்க்கும் நிகழ்ச்சியும், நேற்று காலை மீண்டும் தேர்பவனி துவங்கியது. தேர் பவனியின் போது அம்மனுக்கு மஞ்சள் நீராட்டும், காய் கனி, தனியங்கள், நாணயங்களை காணிக்கையாக செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். ஊர் வழக்கப்படி மேற்கு தெருவில் இருந்து பெண்கள் மட்டும் தேரை இழுந்து சென்று கோவிலில் நிறுத்தினர்.