டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-04-10 07:16 GMT
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று (ஏப்.10) காலை டாஸ்மார்க் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் .இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மார்க் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். கால முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News