ராமநாதபுரம் இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 2280 கிலோ எடை கொண்ட பீடி இலை பண்டல்கள் சரக்கு வாகனங்களுடன் பறிமுதல் மரைன் போலீசார் நடவடிக்கை.;

Update: 2025-04-11 08:41 GMT
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 2280 கிலோ எடை கொண்ட பீடி இலை பண்டல்களை சரக்கு வாகனங்களுடன் மரைன் போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடிய வாகன ஓட்டுனர்களை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக கடல் வழியாக படகுமூலம் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கஞ்சா, பீடி இலை பண்டல்கள், சமையல் மஞ்சள், கடல் அட்டை, ஐஸ் போதை பொருள் உள்ளிட்டவைகள் அதிகளவு கடத்தப்பட்டு வருகிறது. கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் இந்திய கடலோர காவல் படை மற்றும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் வருகின்றனர். இருப்பினும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் புறநகர் பகுதியில் இருந்து சரக்கு வாகனத்தில் பீடி இலை பண்டல்கள் கொண்டு வரப்பட்டு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு படகு மூலமாக கடத்தப்பட இருப்பதாக மரைன் போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் ராமநாதபுரம் மண்டல கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர்கள் தாரிக் குல் அமீன், அய்யனார், நாகராஜ், காவலர் அப்பாஸ் மற்றும் தனிபிரிவு தலைமை காவலர் ளையராஜா ஆகியோர் நேற்று இரவு ராமநாதபுரம் புறநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது ராமநாதபுரம் சேதுபதி நகர் இரண்டாவது தெருவில் சந்தேகத்துக்கிட்டமான முறையில் வந்த இரண்டு சரக்கு வாகனங்களை மரைன் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது மரைன் போலீசாரை கண்டதும் சரக்கு வாகன ஓட்டுனர்கள் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து மரைன் போலீசார் சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 2280 கிலோ பீடி இலை பண்டல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மீடி இலை பண்டல்களை சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்த மரைன் போலீசார் தப்பி ஓடிய ஓட்டுனர்களை தேடி முழுவதுடன் சரக்கு வாகனத்தின் பதிவெண் கொண்டு அதன் உரிமையாளர் மற்றும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர் மரைன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பீடி இலை பண்டலில் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் எனவும், பீடி இலை பண்டல்கள் இன்று இரவு கடல் வழியாக இலங்கைக்கு கடத்தல் இருந்த போது பறிமுதல் செய்யப்பட்டதாக மரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News