தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனை நலசங்கத்தினர் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம் அரசு பணியாளருக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனை நலசங்கத்தினர் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-04-11 11:17 GMT
பணி நிரந்தரம் அரசு பணியாளருக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனை நலசங்கத்தினர் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி அருகே தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்க பொதுச் செயலாளர் குமார், தலைமையில ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பணி நிரந்தரம், அரசு பணியாளருக்கு இணையான ஊதியம், கேரளாவில் வழங்கப்பட்டு வரும் 50,000 போன்று ஊதியம் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும், பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்கப்படுவதாக தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பணி நிரந்தரம் முறையிட வேண்டுமென உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில தலைவர் முருகன், மாநில செயல் தலைவர் தங்கவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News