லஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர் கைது
சிவகங்கையில் லஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்;
சிவகங்கை செந்தமிழ் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (65 ). இவா் செந்தமிழ் நகரில் தன்னுடைய மனைவி மல்லிகா பெயரில் வாங்கிய வீட்டுக்கு சொத்து வரி பெயா் மாற்றம் செய்ய சிவகங்கை நகராட்சி வரிவசூலிப்பாளா் பாலமுருகனை (33) அணுகினாா். இதற்கு அவா் ரூ. 9,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத கணேசன் இதுகுறித்து சிவகங்கை ஊழல்தடுப்புப் கண்காணிப்பிரிவில் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாரின் ஆலோசனையின் பேரில், ரசாயனப்பொடி தடவிய ரூபாய் தாள்களை கணேசன், பாலமுருகனிடனிடம் கொடுத்தாா். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ, ஆய்வாளா்கள் கண்ணன், ஜேசுதாஸ், உதவி ஆய்வாளா் ராஜா முகமது ஆகியோா் பாலமுருகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.