நீர்வள ஆதாரங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு

சிங்கம்புணரி அருகே நீர்வள ஆதாரங்கள் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2025-04-12 10:33 GMT
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட சிலநீர்பட்டி கிராமத்தின் அருகே செல்லும் பாலாற்றில், தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும், நீர்நிலை சீரமைப்புப் பணிகள் குறித்து, இன்றையதினம் (12.04.2025) மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழக முதல்வர் நீர்வள ஆதாரங்களை சீரமைத்து, நிலத்தடி நீரினை மேம்படுத்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாத்திட துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாக வரத்துவாய்கால், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகளை புணரமைத்தல், பலப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் கலுங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறுப் பணிகள் தொடர்ந்து மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில், அரசுடன் இணைந்து நீர்நிலைகளை பாதுகாத்திட தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளித்திட முன்வந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நீர்நிலைகளை சீரமைக்கும் சிறப்பான பணியினை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியதாகும். அதனடிப்படையில், தற்சமயம் மாவட்டத்திலுள்ள சிற்றாறுகள் மற்றும் சீரமைக்கப்படவேண்டிய நீர்நிலைகள் ஆகியவைகளில், மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பான நடவடிக்கைகளுடன் தனியார் பங்களிப்பையும் ஒன்றிணைத்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதில், மொத்தம் ரூ.33,39,375 மதிப்பீட்டில் சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட பாலாற்று பகுதியில் 25.750 கி.மீட்டர் தூரத்திற்கும், உப்பாறு பகுதியில் 2.50 கி.மீட்டர் தூரத்திற்கும் நீர்நிலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, கடந்த 02.04.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரால் அப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென சிலநீர்பட்டி கிராமத்தின் அருகே செல்லும் பாலாற்று பகுதியில், கருப்பையா ராமாயி அறக்கட்டளை சார்பில், நிர்வாக அறங்காவலர் கருப்பையா செட்டியார் மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் முதற்கட்டமாக ரூ.05.00 இலட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதேபோன்று, சொக்கனேந்தல் பகுதியைச் சார்ந்த Tessolve தொழில் நிறுவன தலைவர் ரவி வீரப்பன், கானாடுகாத்தான் பகுதியை சார்ந்த Laxmi Ceramics நிர்வாக இயக்குநர் முத்துராமன், இப்பணியில் தங்களது பங்களிப்பை அளிப்பதற்கும் முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் என்று தற்போது தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு முன்வந்துள்ள மேற்கண்ட நன்கொடையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சீரமைப்பு பகுதிகளில் நிலஅளவீடு பணி மேற்கொள்ளப்பட்டு முறையாக ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு, நீர்நிலை கரையோரங்களில், மரக்கன்றுகள் நடும்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் முறையான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, விரைவில் விருச்சூழியாறு பகுதியிலும் 48 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ.54 இலட்சம் மதிப்பீட்டில் நீர்நிலை சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

Similar News