பரமத்தி ஏல சந்தையில் வாழைத்தார் விலை உயர்வு.

தமிழ் புத்தாண்டை முன் னிட்டு பரமத்தி வேலூர் ஏல சந்தையில் வாழைத்தார் விலை உயர்ந்துள்ள தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2025-04-12 13:12 GMT
பரமத்திவேலூர், ஏப்.12: நாமக்கல் மாவட்டம், பர மத்தி வேலூர் அதன் சுற்று வட்டார பகுதிகளான பொத் தனூர், பாண்டமங்கலம்,குச்சிப்பாளையம், வெங்கரை. நன்செய்இடையாறு, அனிச்சம்பாளையம்,குப்புச்சிபா ளையம், பொய்யேரி, ஓலப்பாளையம்,செங்கப்பள்ளி, எல் லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள ஏல சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் இங்கு ஏலம் எடுக்கப்படும். வாழைத்தார்களை வியாபாரிகள் ,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா,கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், ரஸ்தாளி ரூ.350-க்கும், கற்பூர வள்ளி ரூ.300-க்கும், மொந் தன் வாழைக்காய் ஒன்று ரூ.3-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத் தில் பூவன் வாழைத்தார் ரூ.400-க்கும், பச்சைநாடன் தார் ரூ.300-க்கும், ரஸ்தாளி தார் ரூ.400-க்கும், கற்பூர வள்ளி தார் ரூ.350-க்கும், மொந்தன் ஒரு காய் ரூ.5-க்கும் ஏலம் போனது. சித்திரை முதல்நாளான தமிழ் புத்தாண்டை முன் னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வாழைத்தார்கள் விலை உயர்ந்ததால் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News