இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ இராசா.எம்.பி., கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் கலந்து கொண்டனர்.;
பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ இராசா.எம்.பி., கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெதீசன் - சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம், பாலக்கரை யில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ இராசா.எம்.பி., கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெதீசன் -சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் சன்.சம்பத், பெரம்பலூர் ஒன்றிய கழகச் செயலாளர் எம்.ராஜ்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், துணை அமைப்பாளர்கள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஜே.பி.ஜே.ரினோபாஸ்டின் கிருஷ்ணா இள, ராகவி ரவிக்குமார், ம.தமிழ்வேந்தன், அ.இளையராஜா மற்றும் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.