நாமக்கல் நரசிம்மசுவாமி கோவில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்!
நரசிம்ம சுவாமி தேரோட்டத்தை நாமக்கல் எம்பி மாதேஸ்வரன், மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, ஆணையாளர் மகேஸ்வரி,அறங்காவலர் குழுத் தலைவர் நல்லுசாமி மற்றும் உறுப்பினர்கள் செல்வசீராளன், ராமஸ்ரீனிவாசன்,மல்லிகா குழந்தைவேல், ரமேஷ்பாபு, கோயில் உதவி ஆணையர் இரா.இளையராஜா உள்ளிட்டோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.;

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் ஆகிய திருக்கோவில்களின் பங்குனி தேர்த் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நிகழ்ச்சி சனிக்கிழமை (12.4.2025) நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர் உட்பட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருக்கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி தேர்த் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம் .அதன்படி இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் 7-ம் நாளான 10.4.2025 வியாழக்கிழமை அன்று நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் ஸ்ரீதேவி பூதேவி தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஏப்ரல் 12ஆம் தேதி சனிக்கிழமை காலை நடைபெற்றது.தொடக்கமாக, காலையில் நரசிம்மர் சுவாமி திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத நரசிம்ம சுவாமி உற்சவமூர்த்தி திருத்தேருக்கு எழுந்தருள, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நாமக்கல் கோட்டை சாலையில், நரசிம்ம சுவாமி தேரோட்டம் தேரோட்டத்தை நாமக்கல் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி, மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, ஆணையாளர் இரா. மகேஸ்வரி,கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கா.நல்லுசாமி மற்றும் உறுப்பினர்கள் செல்வசீராளன், ராமஸ்ரீனிவாசன்,மல்லிகா குழந்தைவேல், ரமேஷ்பாபு, கோயில் உதவி ஆணையர் இரா.இளையராஜா உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரானது, நாமக்கல் நரசிம்ம சுவாமி திருக்கோவில், கோட்டை சாலை, ஆஞ்சநேயர் கோவில், வழியாக சென்று நரசிம்மர் கோவில் அருகே புறப்பட்ட இடத்திலேயே நிலை சேர்ந்தது. இதில் நாமக்கல் மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இதேபோல சனிக்கிழமை மாலை நாமக்கல் அருள்மிகு அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகள் திருத்தேரோட்டம், பலபட்டறை மாரியம்மன் கோவில் அருகிலிருந்து தொடக்கம். இதில் பக்தர்கள் ஏராளமான கலந்துகொண்டு தேரை வடம் பிடிக்கின்றனர். இந்த 2 தேர்களும் பலப்பட்டறை மாரியம்மன் கோவில், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் சாலை , சேந்தமங்கலம் சாலை வழியாக சென்று நிலை சேர்ந்தது.இந்த முப்பெரும் தேர்த்திருவிழாவில் நாமக்கல் மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்