ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை!
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.;

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முருகப்பெருமானுக்கு மல்லி, செம்பருத்தி, ரோஜா, துளசி, சாமந்தி, கேசரி, மஞ்சள் அரளி போன்ற மலர்களால் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.