பாவேந்தர் இலக்கியப் கூட்டம்
பாவேந்தர் இலக்கியப் பேரவையின் 75வது முழுநிலவுக்கூட்டம்;

பாவேந்தர் இலக்கியப் கூட்டம் பெரம்பலூர் பாவேந்தர் இலக்கியப் பேரவையின் 75வது முழுநிலவுக்கூட்டம் 12-04-25 ~ 6.30 நடைபெற்றது. வேல் இளங்கோ தலைமை வகித்தார். முகுந்தன் வரவேற்றார். இராமர் பாவேந்தரின் பகுத்தறிவுச் சிந்தனைகள் தலைப்பில் உரைநிகழ்த்தினார். தூய தமிழ்ப்பற்றாளர் விருது பெற்ற முனைவர் மாயக் கிருட்டிணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிற்றரசு நன்றி கூறினார். தமிழ்ச் சான்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.