சர்ச்சைப் பேச்சு: ‘மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்’ - அமைச்சர் பொன்முடி

நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.;

Update: 2025-04-12 17:09 GMT
சர்ச்சைப் பேச்சு: ‘மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்’ - அமைச்சர் பொன்முடி
  • whatsapp icon
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஓர் உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Similar News