பெருமாள் கோயிலில் குதிரை வாகன விழா
பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் எட்டாம் நாள் நேற்று பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது.;

பெரம்பலூர் பெருமாள் கோயிலில் குதிரை வாகன விழா பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் எட்டாம் நாள் நேற்று பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. இந்த பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார், சென்னை சுதர்சன் பட்டாச்சாரியார்கள் செய்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன், அறங்காவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.