அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவி நாய் கடித்ததில் படுகாயம் மனைவி தனியார் மருத்துவமனையில் அனுமதி
அரசு மேற்கொள்ள வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

பெரம்பலூர் அருகே உள்ள பேரளியில், உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவி, ஹாஸ்டலில் உள்ள மரத்தடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு அருகே 2 நாய்கள் வந்தன. அவைகளை அந்த மாணவி அந்த நாய்களை விரட்டினார். இதில் கோபமடைந்த நாய்கள் மாணவிகளை கன்னத்தில் கடித்து குதறியது. இதை அறிந்த சகமாணவிகள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தமிழ்நாட்டில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.