அரசு பட்டுக்கூடு அங்காடியில் விற்பனை ஜோர்

தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்குழு அங்க அடியில் 12,41,140 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் ஏலம்;

Update: 2025-04-13 00:34 GMT
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் செயல் பட்டு வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் தினசரி பட்டுக்கூடுகள் விற்பனைக்காக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களான சேலம் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை திருப்பத்தூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் 39 விவசாயிகள் 2521 வெண்பட்டுக்குடுகளை நேற்று ஏப்ரல் 12 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ 620 ரூபாய்க்கும், சராசரியாக  கிலோ 483 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக கிலோ 256 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் நேற்று 12, 41,140 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதாக அலுவலர் தெரிவித்துள்ளனர்.

Similar News