திமுக இளைஞரணி சார்பில் திருச்செங்கோட்டில் பொதுக்கூட்டம்
திமுக இளைஞரணி சார்பில் திருச்செங்கோட்டில் பொதுக்கூட்டம்;
திருச்செங்கோடு ஒன்றிய திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆகியவை சார்பில் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவனாங்குறிச்சியில் இந்தி திணிப்பு நிதி பகிர்வு பாரபட்சம் தொகுதி சீரமைப்பில் அணிவி செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய திமுக செயலாளர் அட்மாதலைவர் ஜி தங்கவேல் தலைமை வகித்தார்.நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மூர்த்தி,மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பி.எஸ். சீனிவாசன்,திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்சேலம் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அ. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசிய போது கூறியதாவது.திமுக கூட்டம் என்பது பொழுதுபோக்கு நடத்தப்படுவது அல்ல கொள்கைகளை விளக்கவும் உறுதிமொழி எடுக்கவும் கூடுகிற கூட்டம் இதுதிராவிட இயக்கத்தின் ஒரு நூற்றாண்டு கால தொலைபேசி மக்களிடம் எடுத்துச் சொல்லுகிற கூட்டம் கூட்டத்திற்கான மூன்று நோக்கங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது அதிமுக அமைத்திருக்கிற கூட்டணி குறித்து நேற்று தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்த்திருப்பீர்கள் அதிமுக பாஜக கூட்டணி புதிய கூட்டணி அல்ல ஏற்கனவே இருந்த பழைய கூட்டணி பலமுறை முயன்று தோற்ற கூட்டணி நேற்றைய கூட்டத்தில் எடப்பாடி பேச அனுமதிக்கப் படவில்லை அவர் அழைத்து வரப்பட்டாரா இழுத்து வரப்பட்டாரா என்பதே கேள்வியாக இருக்கிறது. பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு முன் அமித்ஷா எங்கு போனார் என்பதை கவனிக்க வேண்டும். இந்தியாவின் உள்துறை அமைச்சராக, பாஜகவின் முக்கிய தலைவராக இருக்கிற அமித்ஷாவை குருமூர்த்தி வந்து சந்திக்காமல் குருமூர்த்தி இருக்கிற இடத்திற்கு அமித்ஷா போவது என்பது பாஜகவை இயக்குகிற இடத்தில் ஆர் எஸ் எஸ் இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்தக் கூட்டணியால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 5% இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு ஓட்டளித்து வந்த நிலையில் இனி அதுவும் நடக்காது. திமுக கூட்டணிக்கு தான் அந்த வாக்குகள் வரும் என்பது உறுதியாகி இருக்கிறது. கொள்கை அளவில் வேறுபாடுகள் இருந்தாலும் ஒரே நோக்கத்திற்காக கூட்டணி அமைவது தான் வழக்கம்.அதைப்போல் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இணைந்திருக்கிறோம் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த இடத்தில் இரு கட்சிகள் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றால் இரண்டு கட்சி கொடியின் தான் பறக்க வேண்டும் ஆனால் அங்கு பாஜக கொடி மட்டும்தான் பறந்தது. அடக்கமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்து எடப்பாடி பழனிசாமி பேச முடியாமல் இருந்த நிலையை தான் பார்த்தோம். அவர்கள் கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார்.கட்சி கொடியில் அண்ணா பறக்கிறார். ஆனால் திமுக மேடைகளில் தான் உண்மையாக அண்ணா கொடிகட்டி பறக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் 32 கோடி மதிப்பீட்டில் 199 வகுப்பறைகள் 85 கோடி மதிப்பீட்டில் 376 நூலகங்கள் அமைக்கப்படும் என அறிவித்து இருக்கிறார். பள்ளிக்கூடம் தொடக்கம் அதற்கு வகுப்பறைகள், நூலகங்கள் வளர்ச்சிக்கான பயன்பாடு அதற்காக நூலகங்கள், நிறைய படிக்க நூலகங்கள் என அமைத்திருக்கிறார்.சென்னையில் அண்ணா நூலகம்,மதுரையில் கலைஞர் நூலகம்,கோவையில் பெரியார் நூலகம்,திருச்சியில் காமராஜர் நூலகம் என அமைத்திருக்கிறார். அது மட்டும் அல்ல உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு சிலை, மற்றும் நினைவு மண்டபம், பட்டிவீரம்பட்டியில் சவுந்தர பாண்டியனாருக்கு நினைவு மண்டபம், காரல் மார்க்ஸ்க்கு சிலைஎன பல்வேறு பண்பாளர்களின் நினைவை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. கைத்தறி நெசவாளர்களை காக்க துண்டு அணிவிக்கும் வழக்கத்தை உருவாக்கியது திராவிட இயக்கம். கைத்தறி ஆடைகளை தோளில் சுமந்து விற்று நெசவாளர்களை காத்த இயக்கம் திராவிட இயக்கம், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக, பாதிக்கப் பட்டவர்களாக இருந்தவர்களை கூட்டங்களில் அவர்களே என விழித்து மரியாதையை உருவாக்கிக் கொடுத்தது திராவிட இயக்கம், திமுக மேடை. அறிவாலயத்தின் செங்கலை உருவாமல் செல்ல மாட்டேன் என கூறியவரை அந்தக் கட்சியிலிருந்து உருவி விட்டார்கள் அவர்தான் அண்ணாமலை. எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்வதில்லை எதை செய்யக் கூடாதோ அதை செய்கிறார் ஒருவர் அவர்தான் நமது தமிழ்நாட்டின் ஆளுநராக உள்ள ஆர்என் ரவி ஆவார்.மதச்சார்பற்ற நாட்டில் பல்வேறு சமூகத்தினர் இணைந்து படிக்கிற கல்லூரியில் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் போட வைத்திருப்பது அவர் ஆர்எஸ்எஸ் சின் ஆள் என்பதை காட்டுகிறது என கூறினார். நிகழ்ச்சியில் மாநிலமகளிர் அணி சமூகவலைதள பொறுப்பாளர் திருநங்கை ரியா திருச்செங்கோடு நகர செயலாளர் கார்த்திகேயன் மல்லசமுத்திரம் பேரூராட்சி செயலாளர் திருமலை அமைப்பாளர் ஜி ஜிந்திரன் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுந்தர் நவலடி ராஜா கதிரவன் சேகர் ஜெகதீஷ் குமார் கார்த்திகேயன் முரளி மாவட்ட துணைச் செயலாளர் மயில்சாமி பொதுக்குழு உறுப்பினர் இந்திராணிஒன்றிய துணைச் செயலாளர் மேனகா கார்த்திஆகியோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார்நன்றி கூறினார்.