மணிமண்டபம் அமைக்க அமைச்சர் ஆய்வு.
மதுரை உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் மணிமண்டபம் அமைக்க இடத்தை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.;

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய பி.கே. மூக்கையா தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் கோரிக்கையை ஏற்று மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்து இருந்தார், அதற்கேற்ப மணிமண்டபம் அமைப்பதற்காக நேற்று (ஏப்.12) உசிலம்பட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா , மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.