பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
தொடர் விடுமுறையை முன்னிட்டு தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்;
தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை மற்றும் நாளை தமிழ் வருட பிறப்பு முன்னிட்டு விடுமுறை தினம் என்பதால் தொடர் விடுமுறையை அடுத்து நேற்று இரவு முதலே பயணிகள் கூட்டம் பேருந்து நிலையத்தில் அலைமோதியது இந்த நாளில் இன்று ஏப்ரல் 13 காலை 4 மணி முதல் சேலம் பெங்களூர் சென்னை திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் முன்பு ஏராளமான பயணிகள் குவிந்தனர் இதனால் பேருந்து நிலையம் பல நாட்களுக்குப் பிறகு பயணிகள் கூட்டத்தால் அலை மோதியது தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தொடர்ந்து தர்மபுரி நகர காவலர்கள் மற்றும் போக்குவரத்து துறை காவலர்களும் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதுபோன்று தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.