காரில் மர்ம மரணம்.

மதுரை அருகே காரில் மர்மமான முறையில் கணவர் இறந்துள்ளார் என்று மனைவி புகார் அளித்துள்ளார்.;

Update: 2025-04-13 01:48 GMT
காரில் மர்ம மரணம்.
  • whatsapp icon
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வேங்கட சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் (44) என்பவர் தனியார் சுத்திகரிப்பு தண்ணீர் கம்பெனி ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் வேலைக்கு சென்ற நிலையில் இவரது கம்பெனி எதிரே உள்ள காரில் மயங்கிய நிலையில் நேற்று ( ஏப்.12)இறந்து கிடந்தார். இதனை கண்டவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி மஞ்சுளா திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News