அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
25 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 10 மாணவர்கள் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் காலங்களில் மாதந்தோரும் ரூ1000/- வீதம் ரூ48000/- கல்வி உதவித்தொகை பெற தேர்வு;
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், கொத்த வாசல், ஊ.ஒ.நடுநிலைப்பள்ளியில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் 36 மாணவர்கள்( Nmms) தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்தேர்வு எழுதினர்.இதில் 25 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 10 மாணவர்கள் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் காலங்களில் மாதந்தோரும் ரூ1000/- வீதம் ரூ48000/- கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யயப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளது. பள்ளி மாண செல்வங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் சக ஆசிரியர்கள் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.