கம்பைநல்லூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

அரூர் தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூர் வர சந்தையில் ஆடுகள் 27 லட்சத்திற்கு விற்பனை;

Update: 2025-04-13 02:08 GMT
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பை நல்லூரில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ஆடுகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை கூடுவது வழக்கம். நேற்று ஏப்ரல் 12 நடந்த சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். சுமார் 240க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஆடுகள் தரம் மற்றும் ரகத்தை பொறுத்து ரூ.5,500 முதல் ரூ.9,500 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.27 லட்சத்திற்கு வருத்தமா நடைபெற்ற வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News