கிறிஸ்தவர்கள் குரு தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி பவனி!

கிறிஸ்தவர்கள் குரு தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி பவனி;

Update: 2025-04-13 02:15 GMT
  • whatsapp icon
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பணிமயமாதா பேராலயம் மற்றும் திரு இருதய ஆலயத்தில் இயேசுபிரான் தனது பாடுகளை உணர்த்த மக்களுடன் குருத்து ஓலையை ஏந்திய படி ஜெருசலேம் நகரம் நோக்கி பயணம் செய்ததை நினைவு கூறும் குருத்தோலை ஞாயிறு பவனி திரு இருதய ஆலயத்தில் ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு ஈஸ்டருக்கு முந்திய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. இயேசுபிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்திய ஞாயிறு தனது பாடுகளை மக்களுக்கு உணர்த்த கழுதை மேல் அமர்ந்து ராஜா போன்று குருத்து ஓலையை ஏந்திய படி ஜெருசலேம் நகரம் நோக்கி ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக சென்றதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள் குருத்து ஓலை ஞாயிறு அன்று குருத்து ஓலையை ஏந்தி பவனியாக சென்று பின்னர் சிறப்பு திருப்பலியில் பங்கேற்பர் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள திரு இருதய ஆலயத்தில் ஆயர் ஸ்டீபன் தலைமையில் குருத்து ஓலை பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர் இதேபோன்று உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்திலும் பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது இதிலும் ஏராளமானோர் குரு தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக சென்றனர் பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Similar News