மானாமதுரை அருகே நகை திருட்டு - ஒருவர் கைது
மானாமதுரை அருகே வீட்டில் நகை திருடப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்;

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேல பசலையைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது வீட்டில் இருந்த 11.5 பவுன் நகைகள் திருடுபோயின. இதுகுறித்து மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் நகையை திருடியது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைதுசெய்து, அவரிடமிருந்து 8.5 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.