
புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த பேரையூர் நாகநாதசுவாமி பிரகதாம்பாள் அம்மன் கோயில் தேரோட்டத்திருவிழா நாளை 13-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 5 ம்தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கிய நிலையில் நாளை தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் பங்கு பெற உள்ளனர்.