கும்பாபிஷேகம் கூட்டத்தில் நகை திருடிய கும்பல் கைது.
மதுரை திருமங்கலம் அருகே கோவில் கும்பாபிஷேகம் கூட்டத்தில் நகையை திருடிய கும்பல் பிடிப்பட்டது.;

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி சுந்தரங் குண்டு ஊர்க்காவலன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி பெருமாளக்காளின்(65) என்ற மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை சிலர் பறித்தனர். அப்போது மூதாட்டி சத்தமிடவே கிராம மக்கள் மர்ம நபர்களை தேடினார்கள். அப்போது மதுரையைச் சேர்ந்த வர்கீஸ் ராஜா (37) அவருடைய மனைவி சுகன்யா (28) பிரபாகரன் (38) அவருடைய மனைவி அருணா (28) ஆகியோர் அவசர அவசரமாக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர் .இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்து கள்ளிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தினர். போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.