ஆண்டுக்கு இருமுறை போடப்படும் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும்
சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்;
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 13 -வது நாகை மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் வே.சித்ரா தலைமையில், நாகை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நாகை ஒன்றியத் தலைவர் எஸ்.பிரேமா வரவேற்றார். மாநில தலைவர் ஆர்.கலா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் எஸ்.அருளேந்திரனும், வரவு, செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் க.பாலாம்பாளும் சமர்ப்பித்தனர். அறிக்கை மீது விவாதம் நடைபெற்று, தொகுப்புரை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.டி.அன்பழகன் சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் த.சசிகலா, மாவட்ட துணைத் தலைவர்கள் சி.கலியபெருமாள், சே.தமிழரசி, கி.ஜோதிலட்சுமி, மாவட்ட இணைச் செயலாளர்கள் டி.வேம்பு, ஜெ.விஜயா, வை.ஜெனிபர், ஒன்றிய தலைவர்கள் எஸ்.பிரேமா, எம்.உஷாராணி, டி.சகிலா, எஸ்.பூங்கோதை, ஏ.செல்வராணி, பி.ரம்யா, ஒன்றிய செயலாளர்கள் ஆர்.கார்த்திகா, எஸ்.அன்பரசி, ஜி.கௌசல்யா, டீ.தமிழரசி, டி.செந்தமிழ்ச்செல்வி, எஸ்.வித்யா ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ப.அந்துவன்சேரல், மாவட்டத் தலைவர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், நாகை வட்டச் செயலாளர் த.ஸ்ரீதர், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ராஜூ, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க தலைவர் ஜெ.ஜம்ருத் நிஷா, ஏடிஜேடி பாலிடெக்னிக் ஊழியர்கள் சங்க தலைவர் சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக த.சசிகலா, துணைத் தலைவர்களாக சி.கலியபெருமாள், என்.ஜமுனா ராணி. கே.ஜோதிலட்சுமி, பி.பரமேஸ்வரி, மாவட்டச் செயலாளராக கா.பாலாம்பாள், இணைச் செயலாளர்களாக டி.வேம்பு, ஜெ.விஜயா, வை.ஜெனிபர், ஏ.கவிதா, மாவட்டப் பொருளாளராக எ.செல்வராணி, தணிக்கையாளராக தமிழரசி, மாநில செயற்குழு உறுப்பினராக வே.சித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட பட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மலர்விழி நிறைவாக பேசினார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர் பாலாம்பாள் நன்றி கூறினார். சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் சத்துணவு ஊழியர்களை பணி அமர்த்துவதை விடுத்து, முறையான காலமுறை ஊதியத்தில் அமர்த்த வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும். சத்துணவு திட்டத்தில் வழங்கப்படுகின்ற வாரிசு வேலையை ஆண்களுக்கும் வழங்க வேண்டும். குறைந்த ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு இருமுறை போடப்படும் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.