மாணவர் அணிக்கான சேர்க்கை தொடக்கம்
மதுரை திருமங்கலம் அருகே மாணவர் அணிக்காக சேர்க்கை நடைபெற்றது.;
மதுரை தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பாக பேரையூரில் நடைபெற்ற இல்லந்தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கையை இன்று (ஏப்.13) தொடங்கி வைத்து கல்வியின் முக்கியத்துவத்தையும் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்லும் மாணவிகள் மாணவர்கள் தொடர்ந்து படிப்பை மேற்கொள்ள உதவியாக மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கி தங்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது என்பதை மாணவர்கள் மத்தியில் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தெரிவித்தார் . இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள், பேரையூர் பேரூர் திமுக நிர்வாகிகள் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.