பாண்டமங்கலம் பேரூராட்சியில் கிளை நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
பாண்டமங்கலம் பேரூராட்சியில் கிளை நூலகம் திறப்பு விழா.;
பரமத்தி வேலூர்,ஏப்.13: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் பேரூரா ட்சியில் கிளை நூலகம் கட்டப்பட்டு திறப்பு விழா விற்கு தயாராக இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள நூலகங்களை வைத்தார். திறந்து அதே போல் பாண்டமங்கலம் பேரூராட்சியில் கட்டப்பட்டி ருந்த கிளை நூலகத்தையும் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பாண்டமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மாணவ, மாண விகள், வாசகர்கள், பொது மக்களின் பயன்பாட்டிற்கு நூலகம் விடப்பட்டது. நிகழ்ச்சியில் பாண்ட மங்கலம். பேரூராட்சி தலைவர் சோமசேகர், துணை தலைவர் பெருமாள் என்கிற முருகவேல் பேரூராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.