பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம்!
வேலூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடந்தது.;

வேலூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடந்தது. இந்த முகாமில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 237 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.