தமிழ் புத்தாண்டு திருநாளில் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா
போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் மலேசிய தொழில் அதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் விழாவை துவக்கி வைக்கின்றனர்;

தமிழ் புத்தாண்டு தினத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா பூலாம்பாடி ஜல்லிக்கட்டு விழா அமைச்சர் சிவசங்கர், தொழிலதிபர் டத்தோ.பிரகதீஸ்குமார் தொடங்கி வைக்கின்றனர்.தமிழ் புத்தாண்டு தினத்தில், புகழ் பெற்ற பூலாம் பாடி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில், பெரம்பலூர், நாமக் கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரிய லூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவடங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகளும், மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும் கலந்து கொள் கின்றனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவை தமிழ்நாடு போக் குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரும், பன் னாட்டு தொழிலதிபரும், பூலாம்பாடியின் அதிமுக்கிய பிரமுகருமான டத்தோ. எஸ். பிரகதீஸ்குமார் மற்றும் எம். எல்.ஏபிரபாகரன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைதலை வர் பி. ராஜசேகரன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். பெரம்பலூர் கலெக்டர் கிரேஷ் பச்சாவ், போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா ஆகியோர் முன்னிலையில் காளைகள் கட்டு அவிழ்த்து விடப்படுகிறது. அரசு விதிமுறைப்படி அனைத்து முன்னேற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்துள்ளனர். வருவாய் துறையினர், கால்நடை பராம ரிப்பு துறையினர், காவல் துறையினர், ஆம்புலன்ஸ் வசதி யுடன் மருத்துவக்குழுவினரும் காயமடைபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பபட் டுள்ளது.