ஏரியூரில் தெப்ப உற்சவ திருவிழா

ஏரியூரில் தெப்ப உற்சவ திருவிழா நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்;

Update: 2025-04-14 03:19 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மயில்ராயன்கோட்டை நாடு ஏரியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மலை மருந்தீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோவிலில் பங்குனி தெப்பத் உற்சவத்தை நடத்த வேண்டும் என கிராம மக்களால் முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சாமி அலங்காரத்துடன் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு தீப ஆராதனையோடு தெப்பத்தில் வலம் வருவதை காண ஏரியூர், மாம்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் வருகை புரிந்து சாமி தரிசனம் பெற்றனர். விவசாயம் செழிக்கவும் நோய் நொடி இன்றி ஒற்றுமையோடு வாழவும் நடத்தப்பட்ட இவ்விழாவில் திடீரென பலத்த காற்றுடன் மழை குறுக்கிட்ட போதிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி வண்ண வண்ண விளக்குகள் அலங்காரத்துடன் தெப்பத்தில் சாமி வலம் வந்ததை ஆர்வமுடன் கண்டு களித்தனர். கடந்த 75 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இக்கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News