காளையார்கோவில் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை
காளையார்கோவில் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
காளையார்கோவில் அருகேயுள்ள நெடுவத்தாவு கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் (29) என்பவருக்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அவர் தனது நண்பர் மரக்காத்தூர் சிவசங்கர் (28) என்பவருடன் இருப்பான் பூச்சி என்ற இடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சரத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவசங்கர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் தவித்த நிலையில், அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சரத்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காளையார்கோவில் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.