திருப்பத்தூரில் ஆன்லைன் மூலம் மோசடி - போலீசார் விசாரணை
திருப்பத்தூரில் ஆன்லைன் மூலம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பல் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ரவி (37). இவரை, கடந்த மார்ச் மாதம் வாட்ஸ் அப் மூலம் ஒருவர் தொடர்பு கொண்டார். அப்போது அவர், ஆன்லைனில் முதலீடு செய்தால் வீட்டில் இருந்தபடியே அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய ரவி, அந்த நபர் கூறிய 4 வங்கி கணக்குகளில் ரூ.11.19 லட்சத்தை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அந்த நபரை, ரவி தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து ரவி அளித்த புகாரின்பேரில் சிவகங்கை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.