அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்
மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;
மதுரையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஏப்.14) அவுட் போஸ்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மாவட்ட செயலாளர் தளபதி எம்எல்ஏ மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர் முன்னதாக எம்எல்ஏ தளபதி அலுவலகத்தில் தளபதி தலைமையில் திமுகவினர் சமத்துவ உறுதிமொழியை ஏற்றனர்..