ரிக் வண்டி உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது.

ரிக் வண்டி உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-04-14 13:05 GMT
பரமத்தி வேலூர் ,ஏப்.14- திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடி தச்சன்காட்டுபாளை யத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 30). இவர் சொந்தமாக ரிக்வண்டி வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது ரிக் வண்டிக்கு வேலைக்கு ஆட்கள் வேண்டும் என் றால் கந்தம்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்த கோபால் (47) என்பவர் கமிஷன் வாங்கிக்கொண்டு ஆட்களை அனுப்பி வைப்பது வழக்கம். அதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோபால கிருஷ்ணன் ரிக்வண்டிக்கு சமையல்காரர் தேவை என கோபாலிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முன்பணமாக ரூ.20 ஆயிரம் வாங்கி உள்ளார். ஆனால் கோபால் சமையல் வேலைக்கு ஆட்கள் அனுப்பாமல் இருந்தார். இதனால் கோபாலகிருஷ்ணன் தான் கொடுத்த பணத்தை கோபாலிடம் திருப்பிகேட்டார். அப்போது அவரை தகாத வார்த் தைகளால் திட்டியும், கத்தியை காட்டி கோபால் மிரட்டியும் உள்ளார். இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கோபாலை கைது செய்தனர்.

Similar News