பரமத்தி அங்காளம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பரமத்தி அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
பரமத்தி வேலூர்.ஏப்.14: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பரமத்தி அங்காளம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்