ராமநாதபுரம் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாள் சமத்துவ நாள் விழா 2,123 பயனாளிகளுக்கு ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.;
ராமநாதபுரத்தில் அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாள் சமத்துவ நாள் விழா 2,123 பயனாளிகளுக்கு ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (14.04.2025) அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 -வது பிறந்தநாள் விழாவையொட்டி சமத்துவ நாள் விழாவாக கொண்டாடும் வகையில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கி துவக்கி வைத்தார். இதனைதொடர்ந்து, ராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக சமத்துவ நாள் விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், 13 துறைகள் சார்பில் 2,123 பயனாளிகளுக்கு 6.48 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்,செ.முருகேசன், ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், வருவாய் கோட்டாட்சியர் இராஜமனோகரன்,தணைத்தலைவர் பிரவீன்தங்கம்,மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செல்வி,வட்டாச்சியர் ஸ்ரீதர், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.