வாகன ஓட்டுனர் உரிமம் பெற்ற பின்னரே வாகனங்களை முறையாக இயக்க வேண்டும்
ஆதலையூரில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்;

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூரில், திருக்கண்ணபுரம் காவல் நிலையம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் ரசீது தலைமை வகித்தார். திருக்கண்ணபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர மூர்த்தி கலந்து கொண்டு, மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் வாகன ஓட்டுனர் உரிமம் பெற்ற பின்னரே வாகனங்களை முறையாக இயக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட், சீட்டு பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். கண்டிப்பாக வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழிமுறைகள் குறித்து பேசினார். கூட்டத்தில், ஏனங்குடி, ஆதலையூர், வவ்வாலடி, கேதாரிமங்கலம், கோட்டூர், வடகரை, கரைப்பாக்கம் ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.