அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி;

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் இரண்டு ஊராட்சிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் குமாரவாடி ஊராட்சி,, ஒரத்தூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். கோரிக்கை மனுவை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதிக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து அமைத்து தர வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன் பேரில் உடனடியாக இப்பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய கழக செயலாளர்கள் சத்யசாய், தம்பு ஆகியோர் கலந்துகொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்துக் கொடுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.