மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.;

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக சித்தா்பீடம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் கலச,விளக்கு, வேள்வி பூஜையை ஆன்மிக இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து நேற்று குருபீடத்தில் உள்ள அடிகளாா் சித்தா் சிலைக்கும், மூலவா்அம்மனுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சோ்ந்த ஆதிபராசக்தி சத்திபீட நிா்வாகிகள், மாவட்ட வழிபாட்டு மன்ற நிா்வாகிகள் வரவேற்பளித்தனா். அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு பூஜைகளை செய்தாா். திரளான பக்தா்கள் தரிசித்தனா். அன்னதான நிகழ்ச்சியை துணைத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குநா் டி.ரமேஷ், ஆதிபராசக்தி பாராமெடிக்கல்ஸ் கல்லூரிகளின் தாளாளா் ஸ்ரீலேகா செந்தில்குமாா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகள், சக்தி பீடங்களின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.