செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி;

Update: 2025-04-15 07:21 GMT
செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில்  நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
  • whatsapp icon
தீயணைப்பு தியாகிகள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலா் லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவி அலுவலா் செந்தில்குமரன் முன்னிலை வகித்தாா் . தீயணைப்பு பணியின் போது வீர மரணம் அடைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது . செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட 11 தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்த நிலைய அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா். ஏப்ரல் 14 முதல் 20 வரை தீ விபத்து குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தீ தொண்டு வார விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள் கல்லூரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நடைபெறும் என மாவட்ட அலுவலா் லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.

Similar News