இரட்டை கொலை தொடர்பாக சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
தாளவாடி அருகே பாட்டி - பேரன் படுகொலை கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி தலைமையில் 4 தனிப்படைகள் அமைப்பு;

ஈரோடு மாவட்டம் தாளவாடி தொட்ட காஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பா. இவரது மனைவி தொட்டம்மா. இருவரும் கூலித் தொழிலாளர்கள் . இவர்களுடைய மகன் ராகவன் (11). சூசைபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். தொட்டம்மாவின் சித்தி சிக்கம்மா (55). இவருடைய வீடு அதைப் பகுதியில் உள்ளது. சிறுவன் ராகவனுக்கு சிக்கம்மா பாட்டி முறையாவார். இதனால் அடிக்கடி பாட்டி வீட்டுக்கு சிறுவன் சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு சிக்கம்மா வீட்டுக்கு சிறுவன் ராகவன் சென்றுள்ளான். பின்னர் அங்கு சிக்கம்மாவும், ராகவனும் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.இந்நிலையில் நேற்று காலை அண்ணன் ராகவனை பார்ப்பதற்காக பாட்டி வீட்டுக்கு ராகவனின் தங்கை சென்றுள்ளார். அப்போது பாட்டியும், அண்ணனும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தார். அக்கம் பக்கத்தினர் உறவினர்கள், அவர்களது வீட்டுக்கு சென்று பார்த்த போது சிக்கம்மா முகம் சிதைந்த நிலையிலும், ராகவன் ரத்த வெள்ளத்திலும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு கதறி அழுதனர். தாளவாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். மோப்பநாய் காவேரி சம்பவத்திற்கு வந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் தடயங்களைசேகரித்தனர். வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடிக்க வந்தபோது இந்த கொலை நடந்ததா ? அல்லது முன் விரதம் காரணமாக இந்த கொலை நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமாக எனக்கு பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடக்கி உள்ளனர். இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.