அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மரியாதை
அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மரியாதை;

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம்,ஜமீன் எண்டத்தூர் ஊராட்சியில் சட்ட மாமேதை டாக்டர் B.R.அம்பேத்கர் 135-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.. இந்த நிகழ்ச்சியானது மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ஓ.எஸ்.தினகரன் தலைமையில் நடைபெற்றது.இதில் திமுக நிர்வாகிகள் சற்குணம்,திருமால், வெங்கடேசன்,விசிக நிர்வாகிகள் தினகரன், சிவகுமார், ராஜ்குமார், ஆனந்தன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.