விருந்தாடியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கொடியேற்றம்.

அப்பாவு நகர் குமார் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ விருந்தாடியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருவிழா முன்னிட்டு கொடியேற்றம்.;

Update: 2025-04-15 08:37 GMT
  • whatsapp icon
தர்மபுரி டவுன் குமாரசாமிபேட்டை அப்பாவு நகர் குமார் காலனியில் வீற்றருக்கும் அருள்மிகு ஸ்ரீ விருந்தாடியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு இன்று மங்கல இசை ஸ்ரீ விநாயகர் வழிபாடு தேவதா அனுக்னஞ.எஜமானர் சங்கல்பம்,புன்னியாக வாசனம், கணபதி ஹோமம் ,நவகிரக ஹோமம்,பூர்ணாகுதி, தீபாராதணை நடைபெற்றது அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் ஆண்கள் பெண்கள் கங்கனம் கட்டுதல் . அதைத்தொடர்ந்து கொடி மரத்திற்கு பூஜை செய்து கொடி ஏற்றப்பட்டது அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வன்னியர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து பம்பை வாதித்துடன் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி அழைத்தல். 16ஆம் தேதி மாலை 5 மணி அளவில் மங்கல இசை பாலகணபதி பூஜை எஜமானர் புண்யாகம்,ஆச்சார்யர் விசேஷ சந்தி, பூதசுத்தி கும்பலங்காரம், கலாகர்ஷனம், யாகசாலை ப்ரவேசம் முதல் கால யாக வேள்வி, நடைபெறும் 17ஆம் தேதி மங்கள இசை, கோ பூஜை இரண்டாம் கால யாக வேள்வி, நாடி சந்தனம், திரவிய ஹோமம், மஹாபூர்ணாகுதி,யாத்ராதானம் தீபாராதணை கடம் புறப்பாடு காலை 9 மணிக்குமேல் 11 மணிக்குள் அருள்மிகு ஸ்ரீ விருந்தாடியம்மன் கோபுரம் மூலவர் மகா கும்பாபிஷேக தொடர்ந்து அபிஷேகம் ஆராதனை தசதரிசனம் மாங்கல்ய தாரனம் தீபாராதணை நடைபெறும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Similar News