
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 79). இவர் மொபட்டில் சூளைமேடு பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியானூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஜெயபாலன் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.