
கோவை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 41). இவர் கடந்த சில மாதங்களாக சேலம் தாதுபாய் குட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி, கூலி வேலைக்கு சென்று வந்து உள்ளார். நேற்று முன்தினம் அவரது அறை வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இது குறித்து விடுதி மேலாளர் செல்வம் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விடுதி அறையை திறந்து பார்த்தனர். அப்போது பாஸ்கர் படுக்கையில் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பது தெரிந்தது. இதையடுத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.