கருப்பசாமி கையால பிடிக்காசு வாங்க படையெடுத்து வந்த மக்கள் கூட்டம்:*

கருப்பசாமி கையால பிடிக்காசு வாங்க மக்கள் கூட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரம் அருகே உள்ளபிரம்மசக்தி புரத்திற்கு படையெடுத்தது.;

Update: 2025-04-15 09:01 GMT
கருப்பசாமி கையால பிடிக்காசு வாங்க படையெடுத்து வந்த மக்கள் கூட்டம்:*
  • whatsapp icon
அரியலூர், ஏப்.15- தமிழ் புத்தாண்டுல பிடிக்காசு வாங்குனா? அந்த வருடம் முழுவதும் செல்வம் செழிக்கும்மாங்க: உலக நன்மைக்காக கழுமரம் ஏறி, கத்தி மேல் நடந்த அருள் வாக்கு சித்தர்:  பக்தியில் உருகி ஆட்டம், பாட்டம் போட்டு வரவேற்ற பெண்கள் உடம்பை சிலிர்க்க வைத்த இந்த திருவிழா எங்கு நடந்திருக்குன்னு பாத்தீங்கன்னா? நம்ம ஜெயங்கொண்டத்துலதாங்க நடந்திருக்கு. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பக்கத்துல இருக்கக்கூடிய பிரம்மசக்திபுரம் என்கிற மகிமைபுரத்துல்ல பிரசித்தி பெற்ற 18-ம் படி கருப்பசாமி கோவில் இருக்காம்மா! விருத்தாச்சலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கிற இக்கோவில்ல ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளான புத்தாண்டு தினத்துல பிடிக்காசு வழங்கும் திருவிழா விமர்சையா நடக்குமாங்க.  அந்த வரிசையில்ல இந்த ஆண்டும் பிடிக்காசு திருவிழாவ கோலாகலமா நடத்தலாம்னு முடிவு பண்ணி, தமிழ் புத்தாண்டு தினத்துல ஆட்டம் பாட்டத்தோட தொடங்கி இருக்காங்க. முன்னதாக 18-ம் படி கருப்பசாமிக்கு திகட்ட திகட்ட அபிஷேகம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து கிடா வெட்டி சிறப்பு படையலும் நடந்திருக்குங்க. அதிலும் குறிப்பா பாத்தீங்கன்னா கோவிலை வழிநடத்துற அருள் வாக்கு சித்தர் தியாகராஜ சுவாமிகள், கருப்பசாமி அருளால அங்கு வழி நெடுக்கிலும் வைக்கப்பட்டிருக்கிற ராட்சச அரிவாள் மேல ஏறி கோவிலை வலம் வருகின்ற நிகழ்வு நடந்துச்சுங்க. அப்போது உடம்பை சிலிர்க்க வைக்கும் அந்தக் காட்சிகளை பார்த்த பக்தர்கள் பரவசத்தில் மூழ்கி ஆனந்த கண்ணீரை வடிச்சு மெய் மறந்து நின்றாங்க. இந்த நிலையிலத்தான் முக்கிய நிகழ்வான பிடிக்காசு திருவிழா நடந்துச்சுங்க. அப்போது அங்கு முதல் நாள் இரவே கோவில்ல தங்கி காத்திருந்த பக்தர்கள்,  நீண்ட வரிசையில் நின்றபடி கருப்பசாமி ‌அருள் வாக்கு சித்தர்கிட்ட, பிடிக்காசை மடி பிச்சையாக வாங்கி அதனை பத்திரமாக வீட்டிற்கும் எடுத்துச் சென்று இருக்காங்க.வருஷத்துல ஒரு நாள் நடக்கும் இந்த திருவிழாவுல கருப்பசாமிகிட்ட பிடிக்காசு வாங்குனா? அந்த ஆண்டு முழுவதும் வற்றாத செல்வம் செழிக்கும் என்ற நம்பிக்கையிலத்தான் வர்றாங்க. அதிலும் குறிப்பாக பாத்தீங்கன்னா தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, பெங்களூர், கர்நாடகா உள்ளிட்ட வெகு தொலைவில் இருந்துகூட இந்த கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமா படையெடுத்து வர்றாங்க என்பதுதாங்க கருப்பசாமியின் ஹெலெட்டே.

Similar News