பையூர் தோட்டக்கலை கல்லூரியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா.
பையூர் தோட்டக்கலை கல்லூரியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா.;

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக டாக்டர். அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமத்துவ நாளாக நேற்று கொண்டாடினர். இந்த விழாவிற்கு கல்லூரியின் முதன்மை அதிகாரி அனிஷா ராணி தலைமை வகித்தார். இதில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் திலகம், சுந்தரமூர்த்தி மற்றும் கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கு இடையே இந்திய அரசியலமைப்பு குறித்து வினாடி வினா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் நிறைவாக, நடுப்பையூரில், நீதி, சமத்துவம், சகோதரத்துவம், கல்வி மற்றும் கற்பி! ஒன்றுசேர்!! புரட்சி செய்!!! என முழக்கமிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தி, சமத்துவம் குறித்து உறுதிமொழி எடுத்து நிறைவு செய்தனர்.