ராமநாதபுரம் அமைச்சர் அமைச்சர் பொன்முடியின் உருவப்படம் தீட்டு எரிப்பு

அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்து அவரது புகைப்படத்தை கிழித்து செருப்பால் அடித்து தீயிட்டு எரித்த இந்து பாரத முன்னணியை சேர்ந்த நபரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு;

Update: 2025-04-15 11:04 GMT
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்து அவரது புகைப்படத்தை கிழித்து செருப்பால் அடித்து தீயிட்டு எரித்த இந்து பாரத முன்னணியை சேர்ந்த நபரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு பெரியார் திராவிட கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்முடி சைவம் மற்றும் வைணவம் சமயம் குறித்து ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி கண்டித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி இந்து பாரத முன்னணியை சேர்ந்த நபர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் பொன்முடி புகைப்படத்தை கிழித்து அதை செருப்பால் அடித்து தீ வைத்து கொளுத்திய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் தங்கராக நூற்றாண்டு விழா கடந்த 6ந் தேதி நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி என்பவர் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை விலைமாதுடன் ஒப்பிட்டு பேசியது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்நிலையில் மிச்சர் பொன்முடி இந்துக்களின் மனதை புண்படுத்தும்படி பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து பாரத முன்னணி மாநில செயலாளர் ஹரிதாஸ் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்திருந்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஹரிதாஸ் அமைச்சர் பொன்முடியின் புகைப்படத்தை கிழித்து அதனை செருப்பால் அடித்து காலால் மிதித்து தீ வைத்து எரித்தார்.

Similar News